Categories
மாநில செய்திகள்

போடி தொகுதியில்… வேட்பு மனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ்…!!

போடி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சியினர் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார்.

இந்நிலையில் போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். போடி தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடும் ஓபிஎஸ் மூன்று முறையும் வெற்றி பெற்றுள்ளார். திமுக சார்பில் அந்த தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 129 தொகுதிகளிலும் திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகின்றது.

Categories

Tech |