Categories
சினிமா தமிழ் சினிமா

போடு…! இதெல்லவா ட்விஸ்ட்…. “தலைவர் 169” படத்தில் இணையும் சிவகார்த்திகேயன் பட நடிகை….!!!

நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்-169 திரைப்படத்தில் ‘டாக்டர்’  பட கதாநாயகி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்திருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்தபடத்திற்கு மிகவும் கவனமாக கதை கேட்டு வந்தார்.

இதன் விளைவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் கதை ரஜினிக்கு பிடித்துப்போனது. இதனால் தலைவர்-169 நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றது. மேலும் அனிருத் இசையமைக்கின்றார்.

இதனைத் தொடர்ந்து ‘தலைவர் 169’ படத்திற்கு கதாநாயகி தேடி வந்த நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.  என்னவென்றால் இப்படத்தில் ‘டாக்டர்’ படத்தின் மூலம் அறிமுகமான ‘பிரியங்கா அருள்மோகன்’ நடிக்க உள்ளார். மேலும் அவர் இப்படத்தில் ரஜினியின் தங்கைசியாக  நடிக்கவுள்ளார் என்றும் செய்திகள் பரவி வருகிறது.

Categories

Tech |