Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… அஜித்தின் ‘வலிமை’ டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?… வெளியான சூப்பர் தகவல்…!!!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இது இவரது 60-வது படமாகும். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர் . மேலும் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Ajith's 'Valimai' motion-poster rakes in millions of views | The News Minute

சமீபத்தில் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் வலிமை படத்தின் டீசரை வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |