Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ‘அரண்மனை-3’ ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு… உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

அரண்மனை-3 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை, அரண்மனை- 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர் . மேலும் ஆண்ட்ரியா, விவேக், சாக்ஷி அகர்வால், மனோபாலா, நளினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் .

குஷ்பூ தயாரித்துள்ள இந்த படத்திற்கு சி.சத்யா இசையமைத்துள்ளார் ‌. இந்நிலையில் அரண்மனை-3 படம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜை பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |