Categories
மாநில செய்திகள்

போடு செம… கட்டணம் மிகவும் குறைவு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் 1, 200 ரூபாயாக குறைத்து தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர்.

அதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரிசோதனை மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கான பிசிஆர் கட்டணம் 3000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக குறைத்தே தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை வைத்திருந்தால் 800 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை பொதுமக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |