திமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் போது கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறார். அதன்படி, ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம், குமாரவலசு ஊராட்சி, மேட்டுப்பாளையம் கிராமத்தில் திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “அதிமுக ஆட்சியில் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடக்கவில்லை. இதனால், தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தி வருகிறோம்.
திமுக ஆட்சி அமைத்தவுடன் முதலில் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். திமுக.திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்தவும், அன்றைய கூலியை அன்றே வழங்கவும் திமுக பரிசீலித்து வருகிறது.” என்று கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படும் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களின் பஞ்சு பதுக்கல்கள் தடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.