சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள ‘அரண்மனை 3’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் அரண்மனை. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கி நடித்திருந்தார். மேலும் அவருடன் இணைந்து ஹன்சிகா, ஆண்ட்ரியா, சந்தானம், மனோபாலா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 2016-ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘அரண்மனை 3’ படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது . சுந்தர்.சி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .
மேலும் இந்த படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் அரண்மனை 3 படத்தை வருகிற செப்டம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.