Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… சூர்யா பிறந்தநாளில்… ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ்…!!!

சூர்யாவின் பிறந்தநாளில் ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சூரி, திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

After releasing stunning poster, Suriya heads to Madurai to shoot for his  next

விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |