நடிகர் சூர்யா டுவிட்டரில் 7 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்பர்ன் சர்வதேச விருது விழாவில் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது சூர்யா எதற்கும் துணிந்தவன், ஜெய்பீம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் சூர்யா டுவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளார். அதாவது சமீபத்தில் டுவிட்டர் கணக்கை தொடங்கிய சூர்யா தற்போது 7 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். தென்னிந்திய நடிகர்களிலேயே குறுகிய காலத்தில் ஏழு மில்லியன் பாலோயர்களை பெற்று சூர்யா சாதனை படைத்ததை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.