Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… தல அஜித்தின் ‘வலிமை’… விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

அஜித்தின் வலிமை படத்தின் புதிய போஸ்டருடன் ரிலீஸ் தேதியை அறிவிக்க  படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கும் இந்த படத்தில் ஹூமா குரேஷி கதாநாயகியாகவும், கார்த்திகேயா வில்லனாகவும் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் நிறைவடைந்துவிட்ட நிலையில் வெளிநாட்டில் படமாக்க பட வேண்டிய காட்சிகள் மட்டுமே இன்னும் பாக்கி உள்ளது.

Valimai Motion poster reaches 10 million views: Team releases new poster -  News - IndiaGlitz.com

இந்நிலையில் படப்பிடிப்பிற்காக அடுத்த வாரம் வலிமை படக்குழுவினர் வெளிநாடு செல்ல இருக்கின்றனர். அங்கு ஐந்து நாட்கள் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது . இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியதும் புதிய போஸ்டருடன் வலிமை பட ரிலீஸ் தேதியை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் ‌.

Categories

Tech |