நடிகர் விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
#Thalapathy66… Sharing with you all an exciting update about my next film with The #Thalapathy @actorvijay Sir, Produced by #DilRaju garu & #Shirish garu under my home banner @SVC_official pic.twitter.com/R24UhFGNlW
— Vamshi Paidipally (@directorvamshi) September 26, 2021
இந்நிலையில் நடிகர் விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி தளபதி-66 படத்தை தோழா, மஹரிஷி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய வம்சி இயக்க இருக்கிறார். மேலும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இருக்கிறார். தற்போது இந்த அறிவிப்பால் தளபதி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.