தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.எல்.விஜய் தற்போது தலைவி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் பயோபிக் படமாகும். இந்த படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா கதாபாத்திரத்திலும், அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரகனி, பூர்ணா, மதுபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
#Thalaivi releasing in theatres on September 10th. #KanganaRanaut #Vijay @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #HiteshThakkar @urstirumalreddy #RajatArora #BhushanKumar @KarmaMediaent @TSeries @vibri_media @ZeeStudios_ #SprintFilms #GothicEntertainment pic.twitter.com/WdEuGxPxGf
— arvind swami (@thearvindswami) August 23, 2021
இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. விப்ரீ மோஷன் பிக்சர்ஸ், கர்மா மீடியா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தலைவி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது .