Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம….! திருச்சிற்றம்பலம் படம் என்ன ஆச்சு…. புதிய அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர்….!!!

இயக்குனர் மித்ரன் ஜவஹர் திருச்சிற்றம்பலம் படத்தின் ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் தற்போது ஒரே நேரங்களில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன், வாத்தி என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் நடித்து முடித்த மாறன் திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. நடிகர் தனுஷ் வாத்தி  என்ற திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும் இப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் தனுஷ் இப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கில்  அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிபில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் என்னும் படத்தில் தனுஷ் நடிப்பதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது வரை அந்த படப்பிடிப்பு  என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. இப்படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் படக்குழுவை திருச்சிற்றம்பலம் என்ன ஆயிற்று என்று கேள்வி கேட்டு வந்தனர். தற்போது திருச்சிற்றம்பலத்தின்  இயக்குனர் மித்ரன் ஒரு சூப்பரான தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விட்டதாகவும் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யாமேனன், பிரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |