பாலிவுட்டில் பிரபல நடிகை ‘கங்கனா ரனாவத்’ புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சி முதலில் மும்பை திரை உலக பிரபலங்கள் மூலம் தான் அறிமுகமானது. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்கும் அளவிற்கு வளர்ந்து விட்டது. இதனைத் தொடர்ந்து எக்ட கபூர் தயாரிப்பில் ‘லாக்கப்’ என்ற நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்நிகழ்ச்சியை ‘கங்கனா ரனாவத்’ தொகுத்து வழங்க இருக்கிறார். இதில் 16 பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
அவர்களை லாக்கபில் தனியாக அடைக்கப்பட்டு போன், டிவி, கடிகாரம் போன்ற எதுவும் இல்லாமல் பல மாதங்கள் அங்கையே இருப்பார்கள். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் ஆர்வத்தை தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் முதல் போட்டியாளராக பூனம் பாண்டே அறிவிக்கப்பட்டுள்ளார்.