தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைப்பதற்காக புதிய சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைப்பதற்காக சட்டமன்ற பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இவர் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும்-48 என்ற உயிர் காக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின்படி சீரான சாலைகள் திட்டம், விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணி நேரம் இலவச சிகிச்சை, சாலை பாதுகாப்பு ஆணையம், அவசர மருத்துவம், இன்னுயிர் காப்போம் உதவி செய் என்ற 5 அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை கடந்த வருடம் மேல்மருவத்தூரில் அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறினார்.
இந்த திட்டத்தின் மூலமாக 37,247 பேர் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். இதனால் 33 ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றபட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அறிமுகப்படுத்தினால் சாலை விபத்தின் மூலம் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை முற்றிலுமாக குறைக்க முடியும் என கூறினார். மேலும் இந்த திட்டத்திற்காக 29.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து விபத்தில் சிக்கியவர்களை கோல்டன் ஹார்ஸ் போன்று உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதிக்கும் நபர்களுக்கு நற்கருணை வீரன் என்ற பட்டமும், ரூபாய் 5 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.