Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… முகேனின் ‘வேலன்’… பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

முகேன் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் முகேன் ராவ். இவர் இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி டைட்டிலை வென்றார். இதையடுத்து முகேனுக்கு படங்களில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி தற்போது இவர் கவின் இயக்கத்தில் உருவாகியுள்ள வேலன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் பிரபு, சூரி, தம்பி ராமைய்யா, ஹரிஷ் பரேடி, பில்லி முரளி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்கை மேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் வேலன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (செப்டம்பர்- 3) மாலை 6 மணிக்கு இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளது. ‘தவலடி’ என்கிற இந்த பாடலை வேல்முருகன் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |