Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம… ரஜினியின் ‘அண்ணாத்த’… பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியான செம மாஸ் அறிவிப்பு…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் அண்ணாத்த படம் வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |