சூர்யாவின் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது.
The day has finally arrived and we have an update that you were eagerly waiting for!
We are thrilled to present the Title Look of #VaadiVaasal at 5:30pm tomorrow. Set your alarm now! #VaadiVaasalTitleLookTomorrow @Suriya_offl @VetriMaaran @gvprakash #VaadiVaasal pic.twitter.com/Ja50irO2Dp— Kalaippuli S Thanu (@theVcreations) July 15, 2021
மேலும் இந்த படத்தில் சூர்யா தந்தை-மகன் என இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் நாளை மாலை 5:30 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். வருகிற செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது .