Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம!… விரைவில் “7ஜி ரெயின்போ காலனி 2″…. பிரபல தயாரிப்பாளர் சொன்ன மாஸ் அப்டேட்…. ஆவலில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தை செல்வராகவன் இயக்க ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும், சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த படத்தில் தன்னுடைய மகன் ரவி கிருஷ்ணாவை அறிமுகப்படுத்துவதற்காக ஏ.எம். ரத்னா படத்தை தயாரித்தார். 7ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்நிலையில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னா தெரிவித்துள்ளார். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாண் நடிக்கும் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் ஏ.எம் ரத்னா சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினார். அப்போதுதான் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |