வாட்ஸ் அப் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளில் ஒரே நேரத்தில் 32 போ் வரை இணைந்துகொள்ளும் வசதி உட்பட பல புது கூடுதல் வசதிகளை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வாட்ஸ் அப் செயலி பயளா்களுக்காக கூடுதல் புது வசதிகள் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் கடந்த ஏப்ரலில் அறிவிப்பு வெளியிட்ட சூழ்நிலையில், இப்போது அந்தக் கூடுதல் வசதிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இவ்வசதிகள் படிப் படியாக அடுத்த வாரத்தில் அனைத்துப் பயனர்களுக்கும் சென்று சேரும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மெட்டா நிறுவனரும் தலைவருமான மாா்க் சக்கா்பொ்க் வெளியிட்ட பதிவில், “வாட்ஸ்அப்-ல் சமூக கழுக்களை அறிமுகம் செய்துள்ளோம். இதன் வாயிலாக ஒன்றுக்கும் அதிகமான குழுக்கள், துணைக்குழுக்களை ஒரு குறிப்பிட்ட பெயரின் கீழ் ஒருங்கிணைத்துக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் வீடியோ அழைப்பில் ஒரே சமயத்தில் 32 நபர்கள் வரை இணைந்துகொள்ள முடியும். இவா்களின் உரையாடல்கள் மற்றும் தகவல் பரி மாற்றங்கள் முழுமையாக பாதுகாப்பட்டதாக இருக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளாா்.
வாட்ஸ் அப் செயலியில் முன்பு 16 எம்பி அளவிலான ஆவணத்தை மட்டுமே அனுப்ப முடியும் என்றிருந்த நிலையில், இப்போது 2 ஜிபி வரையிலான ஆவணத்தைப் பரிமாற்றம் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. ஒரு வாட்ஸ் அப் குழுவில் 1,024 பேரை உறுப்பினா்களாக சோ்த்துக்கொள்ள முடியும். அத்துடன் ஒருவா் வாட்ஸ் அப் சமூக குழுவில் இடம்பெற்றுள்ள 5,000 பயனாளா்களுக்கு தகவல்களை அனுப்பமுடியும் என்பதோடு, அவா்களுக்குள் கருத்துக் கணிப்புகளை நடத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.