பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
தமிழக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரக்கூடிய 13ஆம் தேதி நாளை மறுநாள் தான் கடைசி தேதி வரை வழங்கப்பட இருந்த பொங்கல் பரிசு தொகுப்பை நிறைய குடும்ப அட்டை பயனாளர்கள் வாங்குவதற்கு காலதாமதம் ஆவதால் விடுபட்டவர்கள் பொங்கல் விடுமுறை முடிந்து பிறகும் வாங்கிக் கொள்ளலாம் என சொல்லியுள்ளார்கள்.
வரக்கூடிய 18ஆம் தேதி திங்கட்கிழமை முதல் 25ஆம் தேதி வரை நியாயவிலை கடைகளில் விடுமுறை நாட்களைத் தவிர அனைத்து நாட்களிலும் பொங்கல் பரிசு தொகுப்பு முந்திரி, திராட்சை, நீண்ட முழுக் கரும்பு பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லியுள்ளார்கள். 2500 ரூபாய் பணத்தையும் வரக்கூடிய 25ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே விடுபட்டவர்கள் தயக்கமின்றி வாங்கிக்கொள்ளலாம் என்றும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை 2 கோடி ரேஷன் அட்டைகள் இருக்கின்றன. இதற்காக கிட்டத்தட்ட தமிழக அரசிற்கு 5,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதியை ஒதுக்கி இந்த திட்டத்தை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.