நடிகர் சங்கத் தேர்தலில் விஷால், கார்த்தி வெற்றி பெற்றுள்ளனர்.
கடந்த 2019 ஆம் வருடம் ஜூன் 23ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் கே.பாக்யராஜ் தலைமையிலான ஒரு அணியினரும் நாசர் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் செல்லாது என நீதிமன்றம் அறிவித்து, வாக்கு எண்ணுவதற்கும் தடை விதித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இதை விசாரித்த நீதிபதி தேர்தல் செல்லும் எனவும் வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பள்ளியில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகின்றது. இந்த தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கருணாஸ் வெற்றி பெற்றுள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் தொடர்ந்து முன்னிலையில் இருக்கின்றார். கூடிய சீக்கிரம் ரிசல்ட் வெளியாகிவிடும்.