நாகினி சீரியலின் சீசன் 6 நாளை முதல் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
நாகினி சீரியலானது பழமொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது. மனிதர்கள் மற்றும் பாம்புக்கும் இடையே நடக்கும் போரே இந்த சீரியலின் கதை. இந்த சீரியலானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹிந்தி சீரியலான இதை தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப்பிங் செய்து ஒளிபரப்பப்படுகின்றது.
இந்த சீரியலின் ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சென்றமாதம் சீசன் 6 குறித்து தகவல் வெளியாகியது. இந்நிலையில் இந்த சீரியலின் புரோமோ வெளியாகி நாளை முதல் கலர்ஸ் தமிழில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.