நடிகர் தனுஷின் மாறன் திரைப்படத்திற்கு ட்விட்டரில் புதிய அங்கீகாரம் ஒன்று கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் திரைக்கு வந்த பொழுது பல விமர்சனங்களை சந்தித்தார். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி தற்போது உலகம் முழுவதும் அறிந்த நடிகராக இருக்கின்றார். தற்போது இவர் வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தற்போது கூடிய விரைவில் இவரின் மாறன் திரைப்படம் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியிருக்கிறார் மற்றும் ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
Sweet Surprise. @dhanushkraja's MAARAN Twitter emoji's unlocked. @TwitterIndia #Maaran#MaaranonHotstar#MaaranTrailer #மாறன் pic.twitter.com/MsNtPpZwMq
— Sathya Jyothi Films (@SathyaJyothi) February 28, 2022
இப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடித்திருக்கின்றார். தனுஷின் கடந்த இரண்டு படங்களும் ஓடிடியில் தான் வெளிவந்தது. இந்நிலையில் தற்போது மாறன் திரைப்படமும் ஓடிடியில்தான் ரிலீஸாக இருக்கின்றது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கு பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. என்னவென்றால் டுவிட்டரில் மாறன் படத்திற்கான பிரத்தியோகமான எமோஜி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னால் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் உள்ளிட்ட படங்களுக்கு பிக்சர் எமோஜி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து மாறன் படத்திற்கும் டுவிட்டரில் எமோஜி வெளியாகி உள்ளது. இது குறித்து தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.