புது முயற்சியாக புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதிய உணவில் தானியங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மதிய உணவில் தானியங்களை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அச்செய்தியில் “புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் கற்றுக் கொள்வதற்கும், பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளையும் மேம்படுத்தவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யவும், மதிய உணவில் நவதானியங்களையும், கருப்பட்டி, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற சத்தான உணவுகளை மதிய உணவுத் திட்டத்தில் சேர்ப்பதற்கு வேண்டிய முயற்சிகளை செய்து கொடுத்தும், ஆலோசனையும், அறிவுரையும், வழிகாட்டுதலும் வழங்கினேன்”.
புதிய கல்விக் கொள்கையின் படி மாணவர்களுக்கு பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தான உணவுகளை வழங்குவோம். மேலும் அதை கண்காணிக்கவும் வலியுறுத்தப்படுகிறது. வருகின்ற 2023-ஆம் ஆண்டை நவதானியங்கள் ஆண்டாக உலக உணவு விவசாய அமைப்பு உலக நாடுகளுடன் கொண்டாட இருக்கின்றது. அதை முன்னின்று நடத்துவதற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன் என்று தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.