Categories
தேசிய செய்திகள்

போடு ரகிட ரகிட…. இனி 2-வது பெண் குழந்தை பிறந்தாலும் உதவித்தொகை…. சூப்பர் நியூஸ்…!!!

மத்திய அரசு மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது .அதில் ஒன்றுதான் பிரதம மந்திரி மாத்ரு வந்தன யோஜனா. இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பிறந்தால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் இரண்டாவது முறையாக பெண் குழந்தை பிறந்தாலும் இனி உதவித்தொகை பெறலாம் என்றும், இதற்கான திட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 19 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களுக்கு உதவித் தொகையாக ரூ.5,000 கிடைக்கும். முதல் பெண் குழந்தைக்கு இரண்டு தவணையாகவும், 2வது பெண் குழந்தைக்கு முழு தொகையும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |