Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட…. இன்று முழுவதும் பெண்களுக்கு இலவசம்…. மெட்ரோ நிறுவனம் அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் ஆணுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். ஆண்களுக்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல என்று போட்டியாக அனைத்து துறைகளிலும் அவர்கள் சாதித்து வருகின்றனர். தங்களுடைய ஈடு இணையற்ற உழைப்பின் காரணமாக அன்பால், தியாகத்தால் சமூக வளர்ச்சியில் அளப்பரிய களப்பணி ஆற்றும் இந்த உலகத்தை இயக்கும் அச்சாணியாக பெண்கள் திகழ்கின்றனர். இந்த பெருமைக்குரிய பெண்களை போற்றும் விதமாக இன்று (மார்ச் 8ஆம் தேதி) ஒவ்வொரு வருடமும் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வருடம் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று கொச்சி மெட்ரோ நிறுவனம் மெட்ரோ ரயிலில் பெண் பயணிகள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இதற்கு அனைத்து பெண் பயணிகளுக்கும் வரம்பற்ற இலவசப் பயணத்தை வழங்குவதாகவும் பெண் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் எந்த நிலையத்தில் இருந்தும் இலவசமாக ஏறிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இன்று முக்கிய மெட்ரோ நிலையங்களில் பெண் ஊழியர்கள் மட்டுமே கட்டுப்பட்டாளர்களாக இருப்பார்கள் என்றும் அவர்களுக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில் கவர்ச்சிகரமான போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |