Categories
மாநில செய்திகள்

போடு ரகிட ரகிட!…. தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆசிரியர்கள் பலரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டு பணியில் சேர முடியாமல் அவதியில் உள்ளனர். இதற்கிடையே எதிர்க்கட்சிகள் உடனடியாக ஆசிரியர்கள் பணி நியமனத்தை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தர்மபுரி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளை மேம்படுத்துவது தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “2013 ஆம் ஆண்டில் இருந்து ஆசிரியர் தகுதித் தேர்வில் 80 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதிதாக ஆசிரியர்கள் நியமனம் குறித்த பல கேள்விகளும் உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு அதனை எப்படி சரி செய்வது ? என்பது குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் இடையே தயக்கம் நிலவுகிறது” என்று அவர் கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் தற்போது பயங்கர குஷியில் உள்ளனர்.

Categories

Tech |