ஒரு நிறுவனத்தின் மதிப்பு எப்போது 1 பில்லியன் டாலர் அளவீட்டை தொடுகிறதோ அப்போது அந்த நிறுவனத்தை “யூனிகார்ன்” என்று சொல்வது வழக்கம். அந்த வகையில் முதல் முறையாக இந்திய விளையாட்டுத்துறையில் ஒரு அணி “யூனிகார்ன்” என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது என்றால் அது CSK-வாக தான் இருக்கும்.
அதாவது இந்தியாவில் முதல் “யூனிகார்ன்” நிறுவனம் என்ற சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படைத்துள்ளது. 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ( ரூ.7,500 கோடி ) மதிப்புள்ள ஒரு நிறுவனம் “யூனிகார்ன்” என்று அழைக்கப்படும். இந்த சாதனையை படைத்ததன் மூலம் CSK அணியின் தாய் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை விட அதிக மதிப்புள்ள நிறுவனம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.