தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்து கட்சியினரும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதற்கு முன்னதாக கருணாநிதி நினைவிடத்தில் தேர்தல் அறிக்கையை வைத்து மரியாதை செலுத்திவிட்டு வந்தார். ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தான் அறிக்கையின் நாயகன் என்று அறிவித்தார். பின்னர் 500 நலத்திட்டங்கள் இருப்பதாக அறிவித்த அவர் ஒரு சில அறிக்கைகளை வெளியிட்டார்.
அதன்படி அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையாக ரூபாய் 4000 வழங்கப்படும், விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் வாங்க ரூ.10,00 வழங்கப்படும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச டேப், முதல் தைமூரை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை, 30 வயதிட்குட்பட்ட தமிழக கல்லூரி மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.