பாதுகாப்பான ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ரிசர்வ் வங்கி பட்டன் போன்களுக்கான புதிய பிரத்யேக யுபிஐ வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்ததாஸ் கூறியபோது, “பட்டன் போன்களுக்கான புதிய பிரத்யேக யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
இதன் மூலம் இந்தியாவில் 40 கோடி பேர் பயனடைவார்கள். இந்த யுபிஐ வசதிக்கு “123பே”(123PAY) என்று பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது குறித்த தகவல்களை பெற “டிஜிசாதி” (DIGISAATHI) என்ற பிரத்யேக திட்டமும் விரைவில் தொடங்கப்படும். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களிலுள்ள மக்களுக்கு இந்த யுபிஐ சேவைகள் பெரிதும் உதவும். இந்த “123பே” திட்டத்தின் வாயிலாக இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கியமான இலக்கான டிஜிட்டல் பண பரிவர்த்தனையை அடைய முடியும்” என அவர் தெரிவித்தார்.