2022 ஆம் வருடம் இந்தியாவில் 5 ஜி இணைய சேவை முதல்கட்டமாக சென்னை உட்பட 13 நகரங்களில் நடைமுறைக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
5ஜி தொழில்நுட்பத்தினால் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும். வீடியோக்களை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்க்க முடியும். இந்நிலையில் 5 ஜி இணைய வசதியை உருவாக்கவும், சோதனைக்கான அலைக்கற்றையை மத்திய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் 2022 ஆம் வருடம் இந்தியாவில் 5 ஜி இணைய சேவை முதல்கட்டமாக சென்னை உட்பட 13 நகரங்களில் நடைமுறைக்கு வரும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.