புதுச்சேரி நகர பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி நகர மக்களுக்கு மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதற்காக 140 இடங்களில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 100க்கும் மேற்பட்ட குழாய்களில் தண்ணீர் உவர் தன்மையாக மாறி விட்டது. அதனால் குடி நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆழ்துளை கிணறுகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது.
ஆற்றுப்படுகையில் ஆழ்குழாய் கிணறு அமைக்க பிரான்ஸ் அரசு 500 கோடி நிதி வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் பெண்ணை ஆற்றங்கரை பகுதி மக்கள் தங்கள் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நிலத்தடி நீர்வளம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் செயல்படுத்தி வரும் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று மதியம் சட்டசபை அலுவலகத்தில் நடந்தது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார் கூட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகர மக்களுக்கு பாதுகாப்பு குடிநீர் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது ஆற்றுப்படுகையில் குறித்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவர்களை சமாதானப்படுத்தி ஆழ்குழாய் அமைத்து ஆகியவற்றிற்கு குழாய் அமைத்து நகருக்கு கொண்டு வரவேண்டும். இப்பணிக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும் அதன் காரணமாக லட்சத்தீவில் நடைமுறையில் உள்ளது போன்று தனியார் மூலம் தற்போது பயன்பாட்டில் உள்ள ஆழ்குழாய் கிணறு நீரை சுத்திகரிப்பு வீடுகளுக்கு நேரடியாக வழங்குவது குறித்து ஆலோசனை நடந்தது. மேலும் எதிர்கால நலன் கருதி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.