வரலாறு காணாத அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடியின் சிக்கி மூன்று மாதங்களுக்கு மேல் போராட்ட நெருப்பு பற்றி எரிந்த இலங்கையின் புதிய அதிபராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் ரணில் விக்ரமசிங்கே. மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே மற்றும் அதிபராக இருந்த கோத்தப்பயராஜபக்சே ஆகியோர் பதவி விலகிய நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கியது இலங்கை நாடாளுமன்றம். அரை நூற்றாண்டுக்கு மேலாக அரசியல் அனுபவமும், 45 ஆண்டுகால நாடாளுமன்ற அனுபவமும் கொண்ட ரணில் இலங்கையின் பிரதமராக ஆறு முறை பதவி வகித்துள்ளார்.
220 எம்பி-களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 133 எம்பி-களின் ஆதரவுடன் எட்டாவது அதிபராக தேர்வாகியுள்ளார் ரணில் விக்கிரமசிங்கே. நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிகளின் ஒரே ஒரு எம்பி-ஆன ரணில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட அசாதாரண சூழல் காரணமாக பிரதமராகி சில நாட்களிலேயே அதிபராகவும் மாறி உள்ளார். மக்களால் புறக்கணிக்கப்பட்டவர் நாட்டின் அதிபராக வந்தது எப்படி? இலங்கையின் எட்டாவது அதிபராக தேர்வாகியுள்ள ரணில் விக்ரமசிங்கின் கடந்த கால அரசியல் பயணம் எப்படி இருந்தது.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையை ரணில் மீட்டெடுப்பாரா போன்ற கேள்விகள் எழுகின்றது. இலங்கை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவின் அரசியல் பயணம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி இஸ்மந்த் விக்கிரமசிங்கின் மகனாகப் பிறந்த ரணில் விக்ரமசிங்கே கொழும்புவில் உள்ள ராயல் கல்லூரியில் கல்லூரி படிப்பை படித்து முடித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பையும் முடித்தார். கல்வியை முடித்த பிறகு சிறிது காலம் பத்திரிக்கை நிருபராகவும் சிறிது காலம் வழக்கறிஞராகவும் பணியாற்றினார் ரணில் விக்ரமசிங்கே.
1977 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிட்டியது. கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அதே ஆண்டு தனது 27 வது வயதில் அமைச்சரவையில் இடம் பிடித்து இளைஞர் நலன் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பதவியேற்றார். அதன் பிறகு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பை நோக்கி நகர தொடங்கிய ரணில், அடுத்த ஆண்டு வெளி விவகாரத்துறை அமைச்சர் பதவி அவரை தேடி வந்தது. அப்போது அவருக்கு வயது வெறும் 28 மட்டுமே. அமைச்சராவிலேயே மிகவும் இளம் வயதில் வெளி விவகாரம் போன்ற முக்கிய பணியை கவனிப்பவராக திகழ்ந்தார் ரணில் விக்கிரமசிங்கே.
1980 ஆம் ஆண்டு நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் கல்வி அமைச்சரான ரணில் விக்ரமசிங்கே ,அடுத்த 9 ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் நீடித்து வந்தார். கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கல்வித்துறையில் நவீன காலத்திற்கு ஏற்ப அவர் மேற்கொண்ட மாற்றங்கள் மூலமாக கவனத்தை ஈர்த்தார். இலங்கை அதிபராக இருந்த நரசிங்க பிரேமதாச 1993 ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அதிபர் கொல்லப்பட்டதை தொடர்ந்து இடைக்கால அதிபராக பதவி ஏற்றார் விஜய் துங்கர் ரணில் விக்கிரமசிங்கை பிரதமராக நியமித்தார். இலங்கையின் நியமனம் மூலம் அதிபர் ஆனவர் ரணில் விக்ரமசிங்கதான்.
1993 மே மாதம் 17ஆம் தேதி இவர் முதல் முறையாக இலங்கையின் பிரதமராக பதவி ஏற்றார். ரணில் விக்ரமசிங்கே 1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டு இலங்கை முன்னாள் அதிபர் ஜெயவர்த்தனின் தம்பி மகளான மைத்திரையை திருமணம் செய்தார். 1999 ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே தோல்வியை தழுவினார். 2001 ஆம் ஆண்டு சந்திரிகா தலைமையிலான நடைபெற்று வந்த அரசு கலைக்கப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்தலில் ரணில் விக்ரமசிங்கின் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இதன் பிறகு 2004 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சந்திரிகாவின் முயற்சியால் இவரது ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது நடைபெற்ற தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் அழைப்பு விடுத்தனர். இதனால் ரணில் விக்கிரமசிங்கவிற்கான தமிழ் மக்களின் வாக்குப்பதிவு சரிய இவர் தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு மஹிந்த ராஜபக்ஷை ஆட்சியை கைப்பற்றினார். மகேந்திர ராஜபக்சே அதிபராக பதவியேற்ற பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான அந்த அரசின் நடவடிக்கைகள் தீவிரமடைய தொடங்கியது.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவில்லை. அதன் பிறகு நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பாக ரணில் விக்ரமசிங்கே போட்டியிட நல்லாட்சிகான ஐக்கிய தேசிய முன்னணி என்று பெயர் சூட்டப்பட்டது. கூட்டணி சார்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராக மைத்திரிபால சிறிசேனா அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தேர்தல் முடிவில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது ஆட்சி அமைக்க, 112 இடங்கள் தேவை என்ற நிலையில் 16mbகளை கொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவோடு ரணில் தலைமையிலான அரசு பதவி ஏற்றது.
ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். ஆனால் இந்த பதவியில் அவரால் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கினார் அதிபர். அதற்குப் பிறகுதான் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது யாரை தோற்கடிப்பதற்காக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்றாரோ? அவரையே அழைத்து அதாவது மஹிந்த ராஜபக்சேவை அழைத்து பிரதமர் ஆக்கினார் மைத்திரிபால சிறிசேனா. இந்த நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி போர்க்கொடி தூக்கினார் ரணில் விக்ரமசிங்கே.
இது தொடர்பான வழக்கை விசாரணை செய்த நீதிமன்றமும் ரணிலை பதவி நீக்கம் செய்தது சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தது. பின்னர் எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு ஐந்தாவது முறையாக பிரதமர் ஆனார் ரணில். அதன் பிறகு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின்படி இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்பதால் பிரதமரானார் மஹிந்த ராஜபக்சே. இலங்கையின் அதிபராக மாறினார் கோத்தபய ராஜபக்சே. 2021 ஆம் ஆண்டு விகிதாச்சாரம் முறையில் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் கிடைத்த ஒரே ஒரு இடத்தின் மூலம் எம்பி ஆனார் ரணில் விக்ரமசிங்கே.
220mbக்களை கொண்ட நாடாளுமன்றத்திற்குள் தனி ஒருவராக அமைந்து அரசியல் செய்ய தொடங்கினார் ரணில். ராஜபக்சே தலைமையில் அரசு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. இலங்கை ஐஎஸ் தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பு, அதன் பிறகு வந்த தொற்றுப் பரவல் காரணமாக பிற நாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன் ஆடம்பர செலவுகள், தொழில் முடக்கம் என மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. இலங்கை அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட ஆரம்பித்தது. எவ்வளவு விலை கொடுத்தாலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டது.
பெட்ரோல் டீசலை பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இதையடுத்து மக்கள் போராட்டத்தை கையில் எடுத்ததைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்சே முதலில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்று கேள்வி எழுந்தது. தேர்தலில் தோல்வியடைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்த ஒரே ஒரு இடத்தின் மூலம் எம்பி ஆன கோத்தபையாவால் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே அதிபர் பதவியில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி பெரமுனா சார்பில் அனுரா குமார திஸ்சநாயகேவும் போட்டியிட்டனர். எதிர்க்கட்சி தலைவரும், சமாகி ஜெய பலவேகயா கட்சி தலைவருமான சஜித் பிரேமதாசாவும் போட்டியில் இருந்தார். இந்நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக சஜித் பிரேமதாசா நேற்று திடீரென அறிவித்தார். ஆளுங்கட்சி வேட்பாளர் டல்லஸ் அழகப்பெருமா வெற்றி பெற தனது கட்சியும், கூட்டணி கட்சிகளும் கடுமையாக பாடுபடும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது. இதில்இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட டல்லஸ் அழகப்பெருமா 82 வாக்குகளும், அனுரா குமார திஸ்சநாயகே 3 வாக்குகளும் பெற்றனர்.