Categories
சினிமா தமிழ் சினிமா

போடு வெடிய… ‘சூர்யா 40’ பர்ஸ்ட் லுக் எப்போ?… வெளியான மரண மாஸ் அறிவிப்பு…!!!

சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சூர்யா. இவரது 40- வது படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், திவ்யா துரைசாமி, சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

https://twitter.com/sunpictures/status/1416993378793758721

இந்நிலையில் ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாள் என்பதால் வருகிற ஜூலை 22-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ‘சூர்யா 40’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட உள்ளனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Categories

Tech |