மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா பட டீஸர் புதிய சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்காரு வாரி பாட்டா. கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ், மகேஷ் பாபு எண்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
https://twitter.com/MythriOfficial/status/1425021473987563521
சமீபத்தில் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வெளியான 24 மணிநேரத்தில் தெலுங்கில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற சாதனையை சர்காரு வாரி பாட்டா பட டீஸர் படைத்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.