டான் திரைப்படத்தின் மொத்த வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிவகார்த்திகேயன். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன் நடிப்பால் கவர்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டிரைலர், பாடல் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.
டான் திரைப்படம் சென்ற மே 13 தேதி ரிலீசானது. காலை 4 மணிக்கே ரசிகர்கள் திரையரங்கை சூழ்ந்து சிவகார்த்திகேயனின் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து வெடி வெடித்து திருவிழா போல் கொண்டாடினர். இதை அடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழு ரசிகர்களுடன் சேர்ந்து டான் திரைப்படத்தை பார்த்தனர்.
இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில் திரைப்படத்தின் மொத்த வசூல் 130 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் ஒருவரின் முதல் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது ஹாலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கின்றது.