நடிகர் முகேஷ் கண்ணா நடித்த 90ஸ் கிட்ஸை மிகவும் கவர்ந்த தொடர். இந்த தொடர் தற்பொழுது திரைப்படமாக தயாரிக்கவுள்ளது.
பிரபல நடிகர் முகேஷ் கண்ணா தயாரித்து நடித்த தொடர் ‘சக்திமான்’. இது 90-ஸ் குழந்தைகளின் மிகவும் கவர்ந்த தொடர். இந்தத் தொடர் 1997ஆம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்லவரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ‘சக்திமான்’ தொடர் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் சோனி பிச்சர் இன்டர்நேஷனல் புரோடக்சன் ‘சக்திமான்’ தொடரை பல ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படமாக தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தில் இந்திய முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். இது தொடர்பாக சோனி நிறுவனம் வெளியிட்ட பதிவில் “இந்தியாவின் பல அபிமான தொடர்கள் திரைப்படமாக்கப்பட்டு உலக அளவில் பெரிய ஹிட் ஆகியுள்ளது. அதே போலவே நடிகர் முகேஷ் கண்ணாவின் சக்திமான் தொடர், தற்போது படமாக தயாரிக்கவுள்ளது”. மேலும் இது தொடர்பான அறிவிப்பை வீடியோ மூலம் இணையத்தலில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.