தமிழகத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டுவருகின்ற நவம்பர் 12ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். ஒவ்வொரு வருடமும் முன்னாள் பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக குழந்தைகள் தினம் கொண்டாட முடியவில்லை.
தற்போது அந்த நிலை மாறி பள்ளிகள் செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தை கொண்டாட பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால் பேச்சுப் போட்டிகள் நடத்தி மாணவர்களின் மன நிலையை கொஞ்சம் மாற்றும் விதமாக முடிவு செய்துள்ளது.அதன்படி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி இந்த போட்டி கிருஷ்ணகிரி மாவட்ட அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு காலை 10 மணி அளவில்,கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணியளவில் போட்டி நடைபெறுகிறது.
போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள முடியும். போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு 5 ஆயிரம், இரண்டாம் பரிசு 3000, மூன்றாம் பரிசு 2,000 வழங்கப்படும்.மேலும் பங்கேற்கும் மாணவர்களின் சிறந்த முறையில் திறமையை வெளிப்படுத்தும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா 2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.