Categories
மாநில செய்திகள்

போட்டித்தேர்வுக்கு தயாராவோர் கவனத்திற்கு….. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….. Don’t miss it….!!!!

மத்திய மாநில அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்திய குடிமைப்பணி தேர்வு, இந்திய பொறியாளர் பணி தேர்வு, மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு தேர்வுகள் நடைபெற்று தேர்வில் வெற்றி பெறுவோருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் தமிழர்களின் பங்கு அதிக அளவு இருக்க வேண்டும் என தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே போட்டி தேர்வுக்கு தயாராவதற்கு அரசு சார்பில் இலவச பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு பயிற்றுவிக்கப்படுகிறது. அதேபோல் தற்போது தலைமைச் செயலக பணிக்காக டிஎன்பிஎஸ்சி க்ரூப்-5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயிற்சி பெற விரும்புவோர், www.civilservicecoaching.com இணையதளத்தில் விண்ணப்பித்து சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கல்லூரியில் செயல்படும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத்தில் 26ம் தேதி வரை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |