தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கான போட்டி தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு கருவி புத்தகம் உரியபயிற்சி போன்றவை கிடைப்பதில்லை. அதற்கு தீர்வு காணும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 40 லட்சம் மதிப்பிலான மதுரையில் உள்ள 85 நூலகங்களுக்கு தமிழ், ஆங்கிலம் என 164 புத்தகங்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு கொண்ட 13 ஆயிரம் புத்தகங்களை வழங்க இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இருந்து மதுரை கீழையூர் அரசு நூலகர் நக்கீரன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நூலகத்தின் நூலக ராஜேஸ்வரி போன்றோரிடம் நூல்களை வழங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உஷா, இஆப நூலகத் துறை இயக்குனர் இளம்பகவத் போன்றோரும் காணொலி காட்சி வாயிலாக மதுரையிலிருந்து அமைச்சர் மூர்த்தி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயராக டி.நாகராஜ் எம்எல்ஏக்கள், மூ பூமிநாதன், வெங்கடேசன் மதுரை மாவட்ட ஆட்சியர் அணி சேகர் மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜூத் காலோன் போன்றோரும் பங்கேற்றுள்ளனர்.
மாநகராட்சி நிர்வாக வளாகங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள விதமாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் அமையும். மேலும் தனியார் பயிற்சி மையங்களில் கிடைக்கும் கருவி நூல்கள் சுயமாக படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என பேசியுள்ளார்.