மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட படத்தை போட்டியின்றி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், அர்ஜுன், அசோக் செல்வன், சுதீப், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூ 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இந்தப் படம் மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் வெளியாகும் சமயத்தில் மற்ற படங்கள் எதுவும் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று வாரங்களுக்கு சுமார் 600 திரையரங்குகளில் இந்த படத்தை திரையிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது .