Categories
தேசிய செய்திகள்

“போட்டி அரசு நடத்துகிறார் ஆளுநர்”….. சிபிஐ மாநில செயலாளர் கருத்து…!!!!!!

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, நீலகிரியில் வரும் 25, 26-ம்தேதிகளில் நடைபெறுகிறது. ஆளுநர் மாளிகை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாட்டை, ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.புதிய உலக சூழலில் இந்தியாவின் பங்கு, 2047-ம் ஆண்டு இந்தியா முன்னணி என்ற கருத்துகளை மையப்படுத்தி நடத்தப்படும் இந்த மாநாட்டில், யுஜிசி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார், ஜோஹோ கார்ப்பரேஷன் தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசு நடத்துவதாகவும், ஆளுநர் கூடியுள்ள பல்கலைகழக துணைவேந்தர்கள் மாநாட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சட்ட மீறலில் ஈடுபடும் ஆளுநரின் மாநாட்டை துணை வேந்தர்களும் புறக்கணிக்க வேண்டும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

Categories

Tech |