Categories
உலக செய்திகள்

போட்டி ஏற்பாட்டாளர்களின் கவனக்குறைவு…. சேனிடைசர் கலந்த நீரை குடித்த 3 மாணவிகள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

உயர்நிலை பள்ளி கூடத்தில் சேனிடைசர் கலந்த நீரை குடித்த 3 மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பான் நாட்டில் மத்திய பகுதியில் யமனாஷி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில்  உள்ள உயர்நிலை பள்ளி ஒன்றில் மாணவிகள் கலந்து கொள்ளும் 5 ஆயிரம் மீட்டர் நடை பந்தய போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பந்தயத்திற்கு கலந்து கொள்வதற்கு முன் 3 மாணவிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.

இதனால் பயந்து போன போட்டி ஏற்பாட்டாளர்கள்  அந்த 3 மாணவிகளையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இது கறித்து வெளியான செய்தியில், கைகளை கழுவ  வைத்திருக்கும் சேனிடைசரை பிளாஸ்டிக் பாட்டில்களில் ஊற்றி அதனை தடகள வீராங்கனைகள் குடிநீர் அருந்த கூடிய பகுதிகளில் தவறுதலாக போட்டி நடத்துபவர்கள் வைத்து விட்டனர். மேலும் இதனை அறியாமல் அந்த நீரை எடுத்து குடித்த ஒரு மாணவி வாந்தி, எடுத்து போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதேபோன்று இந்த நீரை, தெரியாமல் எடுத்து குடித்த மற்ற 2 மாணவிகள் உடனடியாக அதனை வெளியே துப்பி விட்டனர்.  பின்னர் போட்டியிலும் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து யமனாஷி கவர்னர் கொடாரோ நாகசாகி கூறியதாவது, “இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.  மேலும் நடந்த சம்பவத்திற்காக தடகள வீராங்கனைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |