Categories
தேசிய செய்திகள்

போட்டி தேர்வுகள் ஹிந்தியில் மட்டும்தான் நடத்தப்படுமா?…. வெளிவரும் தகவல்கள்…. மத்திய அரசு விளக்கம்….!!!!

நாடு முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிராக பல புகார்கள் எழுந்து வருகிறது. அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் குடியரசுத் தலைவரிடம் மத்திய அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலக மொழியாக இந்தியை மாற்ற கோரிக்கை அனுப்பினார். அத்துடன் மத்திய அரசின் பணியாளர் தேர்வு வாரியங்கள் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகள் இனிமேல் இந்தியில் நடத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியது.

இந்நிலையில் SSC-ன் வாயிலாக நடத்தப்படும் மத்திய அரசின் பணியாளர் நியமன தேர்வுகளுக்கு இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையிலுள்ள 22 மொழிகளிலும் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் இந்தியில் மட்டும் இத்தேர்வுகளை நடத்தும் திட்டமில்லை எனவும் உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அவர்கள் நாடாளுமன்றத்தில் தற்போது விளக்கமளித்துள்ளார்.

Categories

Tech |