Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போட்டி போட்ட கல்லூரி பேருந்துகள்…. கோர விபத்தில் பலியான சிறுவன்…. கடலூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள எல்.என்.புரம் புதுநகர் பகுதியில் ரஜினிகாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி ஆவார். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது சகோதரியின் இளைய மகன் கவிசர்மா(5) என்பவரை தனது வீட்டில் தங்க வைத்து பண்ருட்டியில் இருக்கும் தனியார் பள்ளியில் 1-ஆம் வகுப்பு சேர்ந்து படிக்க வைத்துள்ளார். நேற்று பள்ளி முடிந்ததும் ரஜினிகாந்த் கவிசர்மாவை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் காங்கேயனூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர்கள் வாணியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது இரண்டு தனியார் கல்லூரி பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக சென்றது.

அதில் ஒரு பேருந்து ரஜினிகாந்தின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரஜினிகாந்த் மற்றும் கவிசர்மா ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவிசர்மா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |