சமூக ஊடகங்களில் வெளியிடும் படங்களால் பிரான்ஸ் நாட்டின் ஒரு அழகிய இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றதாம்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோஹன்னா கிலேர்மோன்ட் (23) என்பவர் ஒரு வேட்டைக்காரர் என்பதால் அவர் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வாராம். இதனால் அவருக்கு சமூக ஊடகங்களில் 3,00,000 பேர் அவரை பின்தொடர்கிறார்கள். அதே நேரத்தில் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதால் அவருக்கு கொலை மிரட்டல்களும் வருகின்றன. வேட்டையை எதிர்க்கும் பிரான்ஸ் நாட்டு அமைப்புகள் ஜோஹன்னாவை குறிவைத்துள்ளனர். ஆனால் ஜோஹன்னா கொலை மிரட்டல் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருக்கிறார்.
மேலும் அவர் கூறுகையில், வேட்டையாடுவதை பற்றி தன்னை விமர்சித்தாலும் ஆண்களுடன் வேட்டையாடும் குழுவில் இருக்கும் ஒரே பெண் என்பதால் அவர்கள் மகிழ்ச்சியில் தான் இருக்கிறார்கள். மேலும் தன்னை அவர்கள் பெண்ணென்று அவமதிப்பதில்லை என்று கூறியுள்ளார் .மேலும் ஜோஹன்னா கூறுகையில் ,’பெண் என்பவள் அவள் செய்யும் வேலை எதுவாக இருந்தாலும், அது அலுவலக வேலையாக இருந்தாலும், வேட்டையாடும் வேலையாக இருந்தாலும், அவள் ஆண்களை விட சிறப்பாக தான் இருப்பாள்’ என்று கூறுகிறார் .