‘ராண்டு’ உள்ளிட்ட மலையாள சினிமாக்களில் நாயகியாக நடித்தவர் அன்னா ரேஷ்மா ராஜன். இவர், சிம் கார்டு வாங்குவதற்காக ஆலுவாலிலுள்ள ஒரு ஷோரூமுக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நடந்த தகராறு குறித்து பேசி உள்ளார். வழக்கமாக நான் எப்போதும் பொது இடத்திற்கு செல்லும் பொழுது யாரும் அடையாளம் கண்டுவிடக்கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்து கொண்டு ஷால் கொண்டு தலை முடி விட்டு தான் போவேன். அப்படிதான் சிம்கார்டு வாங்குவதற்கும் சென்றேன்.
அங்கிருந்த பெண் ஊழியர் சரியாக நடந்துக்கொள்ளாததால், அவரை ரேஷ்மா போட்டோ எடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பெண், சக ஊழியர்களின் உதவியுடன் ஷோரூமின் ஷட்டரை மூடி எடுத்த புகைப்படத்தை டெலிட் செய்யும்படி மிரட்டியுள்ளார். உடனடியாக ரேஷ்மா போலீசில் புகார் அளிக்கவே, அவர்கள் வந்து ரேஷ்மாவை மீட்டுள்ளனர்.