நடிகை அனிகா சுரேந்திரன் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல குழந்தை நட்சத்திரமாக வலம் வருபவர் அணிகா சுரேந்தர். இவர் நிறைய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் போட்டோ சூட் மூலம் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
இதனையடுத்து, விசுவாசம், மிருதன், நானும் ரவுடி தான் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். சமீபகாலமாக இவரின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் அனிகா சுரேந்திரன் புதிய படம் ஒன்றில் ஹீரோயினாக கமிட்டாகி இருக்கின்றார். ஜினேஷ் கே.ஜாய் இயக்கும் ஓ மை டார்லிங் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் ஆல்பிரட் சாமுவேல் என்பவர் கதாநாயகனாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது கொச்சியில் நடந்த வருகின்றது. அனிகா தனது தாய் மொழியான மலையாளத்தில் கதாநாயகியாகிவிட்டார் குறிப்பிடத்தக்கது.