கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், தேவராயபுரம், நரசீபுரம் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அலுவலக பணிகளுக்கு அதிகளவில் மக்கள் சென்று வருகின்றனர். ஆனால் தொண்டாமுத்தூர் பகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் இரண்டு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் 10 மணிக்கு மேல் சரியான சமயத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தினமும் பேருந்து நிலையத்தில் காத்திருந்து வீட்டிற்கு திரும்பிச் சென்றும் சில நேரங்களில் அதிக தொலைவில் நடந்தும் செல்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து தரப்பில் அதிக முறை புகார் அளித்தும் எதுவும் செல்லுபடியாகவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் தொண்டாமுத்தூர் பகுதியில் வந்த பேருந்துகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் விரைந்து சென்று மக்களிடம் பேசி அதிக அளவில் பஸ்கள் சரியான நேரத்திற்கு இயக்கப்படும் என்று உத்தரவு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் சமாதானத்தோடு போராட்டத்தை கலைத்து சென்றனர்.